ஹவுரா - திருச்சி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 15) உளுந்துார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனை கடக்கும்போது 20 வயது வாலிபர் ஒருவர் ரயில் இன்ஜினில் சிக்கியுள்ளார். 5 கி.மீ. தூரம் இழுத்து வரப்பட்ட அவரது உடல், மேப்புலியூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே கண்டெடுக்கப்பட்டது. விருத்தாசலம் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டுள்ளனர். இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தால் ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக சென்றது.