உளுந்தூர்பேட்டை: கூட்டுறவு கடன் சங்க கிளை திறப்பு விழா

உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கிளை திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு கூட்டுறவு சங்க கிளையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி வைத்தார்.

கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன் வரவேற்றார். எம். எல். ஏ. , க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய சேர்மன்கள் சாந்தி இளங்கோவன், ராஜவேல், நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணை சேர்மன் வைத்தியநாதன், நகர செயலாளர் டேனியல் ராஜ், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அருண்ராஜ், துணை அமைப்பாளர் பாண்டியன், நகராட்சி கவுன்சிலர்கள் சாந்தி மதியழகன், முருகவேல், குருமனோ, ராஜேஸ்வரி சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி