கள்ளக்குறிச்சியை அடுத்த குடியநல்லூர் கிராமத்தில், பண்டறா குளத்தில் குளிக்கச் சென்ற 9 வயது சிறுவன் தினேஷ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான். இதைத் தொடர்ந்து, கிராம மக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேர மருத்துவ வசதி, நிரந்தர அவசர ஊர்தி கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.