கள்ளக்குறிச்சி அடுத்த வானவரெட்டி கிராமத்தில் முருகன் என்பவருக்குச் சொந்தமான 10 ஆடுகளை மோட்டார் சைக்கிளில் திருட முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அதிகாலையில் நாய்கள் குரைத்ததால் முருகன் வெளியே வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் ஆடுகளைத் திருட முயன்றது தெரியவந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டு, வரஞ்சரம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் காசிநாதன் (33), மாரியாப்பிள்ளை (35), வினோத் (38) என்பதும், மது போதையில் திருட முயன்றதும் தெரியவந்தது.