கள்ளக்குறிச்சி சந்தையில் மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட விளைபொருட்கள் விற்பனை

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று மக்காச்சோளம், கம்பு, உளுந்து, எள் உள்ளிட்ட 262 மூட்டை விளைபொருட்கள் கொண்டுவரப்பட்டன. மக்காச்சோளம் ஒரு மூட்டை சராசரியாக ரூ.2,281க்கும், கம்பு ரூ.2,370க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.6.25 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. சின்னசேலம் மார்க்கெட் கமிட்டிக்கு தானியங்கள் வரத்து இல்லாததால் வர்த்தகம் ரத்து செய்யப்பட்டது. தியாகதுருகம் கமிட்டியில் 570 மூட்டை நெல் ரூ.2,250க்கு கொள்முதல் செய்யப்பட்டு, ரூ.10.49 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.

தொடர்புடைய செய்தி