இதில் கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருவாய் துறை தொடர்பான ஆய்வுகள், நீதிமன்ற வழக்குகள், தகவல் அறியும் உரிமை சட்டம், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் சட்டம், ஜாதி சான்றிதழ் உண்மைத் தன்மை சரிபார்ப்பு, சமூக பாதுகாப்பு திட்டங்கள், பேரிடர் நிவாரண உதவிகள், பொதுவினியோக திட்ட பணிகள், பட்டா மாற்றம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
வருவாய் துறை சேவைகளை விதிமுறைகளுக்குட்பட்டு உடனுக்குடன் வழங்கவும், அனைத்து பொதுமக்களுக்கும் முறையாக சென்று சேரும் வகையில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.