தொடர்ந்து, பக்தர்களின் கோவிந்தா கோஷங்களுடன் உட்பிரகாரம் வலம் சென்று ஆண்டாள் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். பின்னர் சாற்றுமுறை சேவை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதேபோல் அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவில், நீலமங்கலம் சீதா லஷ்மன கோதண்டராம கோவில், விருகாவூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் ஆகிய கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
10வது முறை முதலமைச்சர்.. சாதனை புத்தகத்தில் நிதிஷ்குமார்