சின்னசேலம் அருகே விபி அகரம் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில், 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமையல் அறை கூடம் கட்டும் பணி, ஒன்றிய குழு தலைவர் அன்புமணி மாறன் முன்னிலையில் பூமி பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சின்னசேலம் PTO, பள்ளி தலைமை ஆசிரியர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.