கள்ளக்குறிச்சி: 60 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் நடந்த தேர்தலில், 72 பேர் போட்டியிட்ட நிலையில், 43 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 60 வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையை இழந்தனர். தேர்தல் ஆணைய விதிமுறைப்படி, பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகள் பெறாத வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழப்பார்கள். உளுந்துார்பேட்டை தொகுதியில் 11 பேரும், ரிஷிவந்தியம் தொகுதியில் 22 பேரும், சங்கராபுரம் தொகுதியில் 19 பேரும், கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் 8 பேரும் டெபாசிட் இழந்தனர்.

தொடர்புடைய செய்தி