ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் (62), கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி அதிகாலை தனது இல்லத்தில் குளியலறையில் விழுந்து தலையில் காயமடைந்து, டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 15) சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த தகவலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) மாநில செய்தி தொடர்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணால் சாரங்கி உறுதிப்படுத்தி உள்ளார்.