தவெக தலைவர் விஜய் முதலில் களத்திற்கு வரட்டும், வீட்டிற்குள் இருந்துகொண்டு அரசியல் செய்ய முடியாது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். போராடுபவர்களை களத்தில் சந்திக்காமல் வரவழைத்து சந்திப்பது சரியில்லை என்று விமர்சித்துள்ளார். விஜயகாந்தை, விஜய் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டால், அவரது போட்டோவை பயன்படுத்த தவெகவுக்கு அனுமதி அளிப்பதாக பிரேமலதா ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:பாலிமர்