இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காஸா மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவிக்கின்றனர். அக்டோபர் 2023 முதல் தற்போது வரை 65,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 1.65 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண உதவிகள் இஸ்ரேலிய படைகளால் தடுக்கப்படுவதால், பசி, பஞ்சத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர். ஒரு குடும்பத்திற்கு தற்காலிக தங்குமிடம் அமைக்க 3,180 டாலர் தேவைப்படுகிறது, ஆனால் மக்களிடம் பணம் இல்லை.