சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இன்று (செப்.17) நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர். உடனடியாக விமானி, விமானத்தை சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார். விமானியின் இந்த சாமர்த்தியத்தால் அதில் பயணித்த 165 பயணிகளும் எந்த அசம்பாவிதமும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நன்றி: குமுதம்