மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் இன்று (நவ.2) இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே நடந்து வருகிறது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து, 298 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்ரிக்கா அணி விளையாட உள்ளது.