ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்று (நவ.02) 3வது T20 போட்டியில் விளையாடியது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி முதல் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.