சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ஜனநேசன் (70) பிரபல எழுத்தாளராவார். இவர் மகன் கர்ணன் ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்து தெலங்கானா மாநிலத்தில் பணியாற்றுகிறார். ஜனநேசன் அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதையடுத்து அவர் உடல் சொந்த ஊரான காரைக்குடிக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்க கர்ணன் முடிவெடுத்து மருத்துவ அலுவலரிடம் உடலை ஒப்படைத்தார்.