தனது செயல்களால் பதிலடி கொடுத்து வருகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மறைமலைநகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் இன்று (அக்., 04) பேசிய அவர், சிலருக்கு தமிழும் பிடிக்காது, தமிழர்களையும் பிடிக்காது. தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் கூட்டத்தை வேரோடு வீழ்த்த வேண்டும். என்னைப்பற்றி பல வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்றார்.