கரூர் விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நீதிமன்றம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னை மாமல்லபுரத்தில் இன்று (நவ.5) நடந்த தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், “தவெகவுக்கு எதிராகவும் தங்களுக்கு ஆதரவாகவும் உயர் நீதிமன்ற நீதியரசர் தீர்ப்பளித்து விட்டதாக திமுகவினர் விழா எடுத்து கூத்தாடி குதூகலித்தனர். அந்த உத்தரவு எந்த ஆவணத்தின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது என உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. நான் கேட்கவில்லை’’ என்றார்.