மனைவி, மகளை கொடூரமாக கொன்ற கணவர் தற்கொலை

தெலங்கானா மாநிலத்தில், மனைவி மற்றும் மகள்களை கொலை செய்த கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விகாராபாத் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக, இன்று (நவ.2) காலை வேபுரி யாதய்யா என்ற நபர் தனது மனைவி அலிவேலு (31), இரண்டு மகள்கள் அபர்ணா (13), ஸ்ராவாணி (10), மருமகள் ஹனுமாம்மா (40) ஆகியோரை கத்தியால் தாக்கி, பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில், மூத்த மகள் அபர்ணா மட்டும் உயிர் தப்பினார்.

தொடர்புடைய செய்தி