திருவண்ணாமலை மாவட்டம் பெருங்கட்டூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (35), தனது மனைவி சுதாவிடம் டீ குடிக்க பணம் கேட்டுள்ளார். இதில் சுதா பணம் தர மறுத்ததால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பிரகாஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, குடும்பத்தினர் பிரகாஷை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.