பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்துங் மாவட்டத்தில், ரயில் பாதையில் ஏற்பட்ட மிகப்பெரிய குண்டுவெடிப்பு காரணமாக ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இந்த கோர விபத்தில், 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.