ராஜஸ்தான் மாநிலத்தில், லாரி மீது டெம்போ வாகனம் மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலோடி மாவட்டத்தில், இன்று (நவ.2) இரவு ஒரு பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது. வேகமாக சென்ற டெம்போ ஒன்று, சாலையோறம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் 18 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட போலீசார், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.