கோர விபத்து.. பெண் மருத்துவர் சம்பவ இடத்திலேயே பலி

விழுப்புரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்ட மாணவிகள் சிலர், புதுச்சேரியில் உள்ள தோழியின் வீட்டில் தங்குவதற்காக காரில் சென்றுள்ளனர். அப்போது, புதுச்சேரி பேருந்து நிலையம் எதிரே கட்டுப்பாட்டை இழந்த கார், திடீரென நடைபாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி