நவி மும்பையில் நடந்த மகளிர் உலகக் கோப்பை இறுதியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி முதல் முறையாக 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றது. இதனை பாராட்டி பிசிசிஐ 50 கோடிக்கு மேல் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. ஆண்கள் அணியை போல், மகளிர் அணியும் உலகக் கோப்பை வென்ற நிலையில், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை கௌரவிக்கும் வகையில் பிசிசிஐ சிறப்பு போஸ்டர் வெளியிட்டுள்ளது.