கட்சி கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்.. நவ.6ல் அனைத்துக் கட்சி கூட்டம்

பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோட் ஷோக்களுக்கான கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்க, வரும் நவ.6 ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வரும் 6 ஆம் தேதி மூத்த அமைச்சர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி