ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில், பெறப்படும் வரிகளை மத்திய-மாநில அரசுகள் சரிபங்காக பிரித்துக்கொள்கின்றன. விரைவில் அமலாகும் புதிய GST வரி சீர்திருத்த நடவடிக்கைக்குப்பின் தமிழகத்துக்கு ரூ.3000 கோடி வரை இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. GSTயில் கிடைக்கும் நிதி ஆதாரங்கள் மறுகட்டமைப்புக்கு உட்படும் என்பதால், நிலைமை சீராக சில மாதங்கள் வரை காலம் பிடிக்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.