தமிழக அரசு ஊழியர்களுக்கு, அக்.3ஆம் தேதி பொதுவிடுமுறை என செய்திகள் வருவது வதந்தி என அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி விடுமுறையைத் தொடர்ந்து, அக்.3ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளதாகவும், இதனால் அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அது வதந்தி என்ற தகவல் வெளியாகியுள்ளது.