கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் இன்றும் (செப் 28) நாளையும் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று சென்னையில் மேம்பாலம் திறப்பு, நாளை முதல்வரின் ராமநாதபுரம் பயணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.