இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. பணவீக்கம், உலகளாவிய அரசியல் பதட்டங்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக மாற்றியுள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஆண்டுக்கு சராசரியாக 8% அதிகரித்துள்ளது. இந்த விகிதம் தொடர்ந்தால், 2050-ல் ஒரு கிலோ தங்கத்தின் விலை ரூ.30 முதல் ரூ.35 கோடி வரை உயரலாம். சராசரி விகிதம் 10% ஆக இருந்தால், ரூ.45 முதல் ரூ.50 கோடி வரை உயரலாம் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.