தங்கம் விலை வரலாறு காணாத வகையில் இன்று (அக்., 08) ஒரே நாளில் ரூ.1,480 உயர்ந்து ரூ.91,000-ஐ கடந்துள்ளது. இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.90,400-க்கும் விற்பனையானது. தற்போது மேலும் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.91,080-க்கும், கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.11,385-க்கும் விற்கப்படுகிறது. வரலாற்றில் முதன்முறையாக வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.170-க்கும், ஒரு கிலோ ரூ.1,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.