சாலையில் சென்றவர்களை வெட்டிய கும்பல்.. போலீஸ் தீவிரம்

சென்னையில் சாலையில் சென்றவர்களை போதை கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த போதை கும்பல், கோயம்பேடு, கொளத்தூர் பகுதிகளில் பொது இடங்களில், கண்ணில் படுவோரை வெட்டியது. இதில், கார்த்திக் என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும், 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், அந்த போதை கும்பலை பிடிக்க 3 தனிப்படை போலீஸ் உருவாக்கப்பட்டுள்ளது. 

நன்றி: குமுதம்

தொடர்புடைய செய்தி