தமிழகத்தில் Foxconn நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், இதை புதிய முதலீடாக பார்க்கவில்லை என்று Foxconn நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. இதனால் அரசு பொய் சொல்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள அமைச்சர் TRB ராஜா, "இந்த திட்டத்திற்கான பேச்சுவார்த்தை ஒரு வருடமாக நடந்து வருவதால், Foxconn இதை புதிய முதலீடாக கருதவில்லை என்றாலும் இது உறுதியான முதலீடு" என விளக்கமளித்துள்ளார்.