மீன்களில் பலவகையான மீன்களை நாம் பார்த்திருப்பதுண்டு. ஆனால், மனித முகம் உருவம் கொண்ட ஒரு மீனின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், உண்மையில் இது மீன் அல்ல, ஒரு கடல் நத்தை வகையைச் சேர்ந்த கடல் உயிரி, அதாவது கட்டில்பிஷ் (Cuttlefish) எனப்படும் உயிரினம். நிறம் மற்றும் தோல் அமைப்பை சில விநாடிகளில் மாற்றும் திறன் கொண்டது. இதன் உடல் வடிவம் மற்றும் கண்கள் காரணமாக சில நேரங்களில் மனித முகம் போல தோன்றலாம்.