கிணற்றில் தத்தளித்த இளைஞர்.. போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில், கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிய இளைஞரை, தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சுற்றுச்சுவர் இல்லாத நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தவறி விழுந்துள்ளார். உயிருக்குப் போராடிய இளைஞரை பார்த்த அப்பகுதியினர், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, அங்கு விரைந்த வீரர்கள், இளைஞரை பல மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி