சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெண் தனது சேலைக்கு தீ வைத்து நடனமாடியுள்ளார். இது ரீல்ஸ்-க்காக எடுக்கப்பட்ட வீடியோ என கூறப்படுகிறது. மேலும், சமூக வலைத்தளங்களில் ஃபாலோவர்ஸை அதிகரிக்க இதுபோன்ற ஆபத்தான ரீல்ஸ்கள் செய்யப்படுவதாக தெரிகிறது. இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தானவை என நெட்டிஷன்கள் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் எப்போது, எங்கு நடந்தது? என்பது தெளிவான தகவல் தெரியவில்லை.