UIDAI தற்போது ஆதார் சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. தற்போது 50 ரூபாயாக வசூலிக்கப்படும் சேவைகள் 75 ரூபாய் ஆகும், 100 ரூபாயாக இருந்த சேவைகள் 125 ரூபாய் ஆக உயர்கிறது. இந்த கட்டண உயர்வு 2028 செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2028 அக்டோபர் 1 முதல், கட்டணங்கள் மீண்டும் உயர்ந்து, 75 ரூபாய் சேவைகள் 90 ரூபாய் மற்றும் 125 ரூபாய் சேவைகள் 150 ரூபாய் ஆகும். எனவே, உடனடியாக ஆதார் அப்டேட் செய்துகொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.