உத்திரப் பிரதேசம் ஷாஜகான்பூர் ராம்நகர் கிராமத்தில் இன்று (செப்.9) காலை, ராமாயூதர் என்பவர் ஃபேன் போடா முயன்றபோது மின்சாரம் தாக்கி கூச்சலிட்டுள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது மகள் கிரண் (15) என்பவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிரணின் தாய் கடந்த வருடம் இறந்துவிட்ட நிலையில், தற்போது இரண்டு சகோதரர்கள் மட்டுமே குடும்பத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.