விரைவு உணவுகளை சாப்பிட்ட பிறகு, கலோரிகளை எரிக்க நாம் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு சமோசாவில் சுமார் 250 கலோரிகள் இருப்பதால், அவற்றை எரிக்க ஒருவர் 50 நிமிடங்கள் கட்டாயம் நடக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதேபோல, ஒரு துண்டு பீட்சாவைச் சாப்பிட்டால், ஒரு மணி நேரம் நடக்க வேண்டியிருக்கும். மேலும், அதிக கலோரி கொண்ட ஒரு தட்டு சோலே பதுரேவை சாப்பிட்டால், சுமார் 2 மணி நேரம் நடக்க வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.