அஜித்தின் கை அசைவுக்கு அடங்கி நின்ற ரசிகர்கள்

நடிகரும் கார் ரேசருமான அஜித்குமார், தனது ரசிகர்களை கை அசைவில் அதட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்பெயினில் ரேஸ் களத்தில் இருந்த அஜித்குமாரை, அங்கு திரண்ட ரசிகர்கள் பார்த்தனர். அப்போது அவர்களை பார்த்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, அஜித்தைப் பார்த்த மகிழ்ச்சியில், ரசிகர்கள் கைத்தட்டி, விசில் அடித்தனர். உடனே கடுப்பான அஜித், 'அப்படி செய்யாதீர்கள்' என சைகை மூலம் அறிவுறுத்தினார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி