பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை நூபுர் அலங்கார். 'சக்திமான்' உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து 27 ஆண்டுகளாக இந்தி தொலைக்காட்சி உலகின் பிரபலமாக இருந்தவர் இவர். 2019ம் ஆண்டு நடைபெற்ற பிஎம்சி வங்கி மோசடியில் தனது சேமிப்பு மொத்தத்தையும் இழந்தார். பின்பு தனது தாய், சகோதரியின் மறைவால் உலக வாழ்க்கையை வெறுத்து ‘பீதாம்பரா மா’ என்ற பெயரில் சந்நியாசம் மேற்கொண்டு பிச்சையெடுத்து வாழ்ந்துவருகிறார்.