தவெக தலைவரும், நடிகருமான விஜய் நிச்சயம் தமிழ்நாட்டை ஆள்வார் என்று நடிகர் பெஞ்சமின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "விஜய் சார்-க்கு தோல்வி என்பதே கிடையாது; அவர் ஒரு நல்ல மாமனிதர், எளிமையான மனிதர்" என தெரிவித்துள்ளார். மேலும், "சின்ன குழந்தைகள் மனதில் இடம் பிடிப்பவர்கள் முதலமைச்சர் ஆகக்கூடிய பாக்கியம் இருக்கிறது. எம்.ஜி.ஆர் போல விஜயும் குழந்தைகள் மனதில் இடம் பிடித்தவர்; அவர் நிச்சயம் தமிழ்நாட்டை ஆள்வார்" என்று கூறியுள்ளார்.