பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் தரைத்தளத்தில் இன்று (நவ.4) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட தகவலின்படி, இந்த கோர விபத்து கேஸ் சிலிண்டர் வெடித்ததன் காரணமாக நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன், நீதிமன்ற கட்டிடத்தின் மேற்கூரையும் இடிந்து விழுந்துள்ளது. மேலும், விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.