ஈரோடு வட்டாரத்தில் நெல் சாகுபடி தீவிரமடைந்துள்ளது. நெற்பயிர் இளம் தளிர்கள் மஞ்சளாக மாறும். இதை நிவர்த்தி செய்ய, விவசாயிகள் நெற்பயிர் நடவுக்கு முன் ஏக்கருக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட்டை 20 கிலோ மணலுடன் கலந்து இட வேண்டும். களர் நிலங்களில் ஏக்கருக்கு 16 கிலோ ஜிங்க் சல்பேட் பயன்படுத்தலாம். நட்ட 30-40 நாட்களுக்குள் மீண்டும் ஒருமுறை இடுவதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம். ஜிங்க் சல்பேட், பயிர் தழைச்சத்தை உறிஞ்சவும், பிற சத்துக்களை பயன்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவும் உதவுகிறது.