ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் பேரூராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெற்றது. இதில், உதவி இயக்குனர் வெங்கடேசன், பேரூராட்சி சேர்மன் சசிகலா ராம்குமார், வைஸ் பிரெசிடென்ட் சரவணன், செயல் அலுவலர் பிரேம்நாத் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்றனர். பெண்கள், ஆண்கள் என பலரும் ஆர்வத்துடன் இந்த முகாமில் கலந்துகொண்டனர்.