ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் பரிசல் துறையில் ஆண்டுதோறும் நடைபெறும் ஏலம், இந்த ஆண்டு கிராம ஊராட்சி தலைவர் இல்லாததால் நடைபெறவில்லை. இதனால், குறைந்த செலவில் இயங்கிய பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஏழை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் மின்னல் நாகராஜ் சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.