ஈரோடு: மரத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம்

ஈரோடு மாவட்டம் சிறுகளஞ்சி சீரங்கம்பாளையம் கல்லங்காடு தோட்டத்தில், வேப்ப மரத்தில் மஞ்சள் துணியில் ஆண் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக தொங்கியதை அவ்வழியாக சென்றவர்கள் கண்டனர். சென்னிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்தவருக்கு சுமார் 30-35 வயது இருக்கலாம் என்றும், 15 நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி