ஈரோடு: தனியார் மருத்துவமனையில் பெண்மணி தாலி செயின் திருட்டு

ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்கச் சென்ற பெண்மணி ஒருவர், கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் செயினை இழந்து அதிர்ச்சியடைந்தார். மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தும், ஊழியர்களிடம் விசாரணை நடத்தியும் பலன் கிடைக்காததால், பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி