ஈரோடு: ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் சடலம்

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடிக்கும் மாவிலிபாளையத்துக்கும் இடைப்பட்ட ரயில்வே தண்டவாளத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, உயிரிழந்தவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி