ஈரோடு அசோகபுரத்தில், ராஜா என்பவரின் மனைவி சவுந்தர்யா (26) கடன் பிரச்சனை காரணமாக வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பாக நேற்று வாக்குவாதம் முற்றிய நிலையில், ராஜா வெளியே சென்றுவிட்டு மதியம் வந்தபோது சவுந்தர்யா தூக்கில் தொங்கியதை கண்டார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்தர்யா உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.