ஈரோடு மாவட்டத்தில் சமூகநலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், வழக்கு பணியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் ஈரோடு மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, வருகிற 19ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 0424 2261405 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.